Thursday, 28 July 2011

அம்மா





 குடும்பம் எனும் கோவிலில்
அன்பை அள்ளி வழங்கும்
கடவுள்...!
காணிக்கை இன்றி நம்மை
காக்கும் தெய்வம்
பூவுலகில் நம் மகிழ்வுக்காக
தன்னுடலை வருத்தியவள்

பத்து மாதம் சுமந்து
உதிரத்தை பாலாக்கி
உடலில் வலுவேற்றி
தத்தி தத்தி நடை பயில
தன் கரம் தந்து
நோய் பிணிகள்  அணுகாமல்
கண்ணும் கருத்துமாய் கவனித்து

கல்வியில் உயர...!
ஒழுக்கத்தில் சிறக்க...!
பல்கலையும் கற்று...!
படிப்படியாய் உயர்வடைய
நல்வழி காட்டி
சுற்றத்தின் முன்
உயர்ந்து நிற்க
எதிர்பார்ப்பின்றி
எப்போதும் உழைக்கும்
சிறந்த வழிகாட்டி..!

அள்ள அள்ள குறையாத அட்ஷயபாத்திரம்
உன் பெருமை கூறும் சொற்கள்..!
என்ன தவம் செய்திருந்தேன்
தாயாய் உன்னை பெறுவதற்கு..!
இந்த ஜென்மம் போதாது
நான் உங்கடன் தீர்ப்பதற்கு..!

Wednesday, 27 July 2011

தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

 

விநாயகர் துதி...!